உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவநாத சுவாமி கோவிலில் உண்டியல் வசூல் ரூ. 14 லட்சம்

தேவநாத சுவாமி கோவிலில் உண்டியல் வசூல் ரூ. 14 லட்சம்

கடலூர்: திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் உண்டியலில் 14 லட்சத்து 62 ஆயிரத்து 279 ரூபாய் காணிக்கை வசூலானது. கடலூர், திருவந் திபுரம் பிரசித்திப் பெற்ற தேவநாத சுவாமி கோவில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நேற்று காலை நடந்தது. இந்து சமய அற நிலையத் துறை உதவி ஆணையர் ஜோதி முன்னிலையில் இப்பணி நடந்தது. காணிக்கை எண்ணும் பணியில் வங்கி பணியாளர்கள்,  தன்னார்வலர்கள் 50 பேர் ஈடுபட்டிருந்தனர்.  14 லட்சத்து 62 ஆயிரத்து 279 ரூபாய் ரொக்கம், 280 கிராம் தங்கம், 220 கிராம் வெள்ளிப் பொருட்கள்,  28 வெளிநாட்டு கரன்சிகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். கோவில் நிர்வாக அலுவலர் நாகராஜன், பாடலீஸ்வரர் கோவில் நிர்வாக  அலுவலர் ரத்தினாம்பாள், ஆய்வர் ஜெயசித்ரா  உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !