உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உளுந்தூர்பேட்டை அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

உளுந்தூர்பேட்டை அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை கிழக்கு கந்தசாமிபுரத்திலுள்ள, ஸ்ரீசமயபுரத்து அங்காளம்மன் கோவிலில் தை அமாவாசையையொட்டி  ஊஞ்சல் உற்சவம் நடந்தது. விழாவையொட்டி, நேற்று முன்தினம் மாலை 6:30 மணிக்கு, அம்மனுக்கு வெங்கடேசன் குருக்கள் தலைமையில் பால்,  தயிர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தன. பின் பெண்கள் தீச்சட்டி ஏந்தி ஊர்வலம் வந்தனர்.  ஊஞ்சல் உற்சவத்தில்  அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதற்கான ஏற்பாடுகளை  சுரேஷ் மீனா, சிவாதிவ்யா, புருஷோத் மஞ்சு மற்றும் பொதுமக்கள் செய்திருந் தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல், உளுந்தூர்பேட்டை அமச்சார் அம்மன் கோவில் தெருவிலுள்ள  ஸ்ரீ அங்காளம்மன் கோவிலில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12:00 மணிக்கு பெண்கள் தீச்சட்டி ஏந்தி ஊர்வலம்  சென்றனர். சிறப்பு அலங்காரத்தில்  அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !