உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவபாஷாண கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் நுழைவு கட்டணம்!

நவபாஷாண கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் நுழைவு கட்டணம்!

தேவிபட்டினம்: நவபாஷாண கோயிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களுக்கு ஊராட்சி நிர்வாகம் நுழைவு கட்டணம் வசூல் செய்வதற்கு விஷ்வ இந்து பரிஷத் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதன் மாநில இணை பொது செயலாளர் சின்மய சோமசுந்தரம் கூறியதாவது: தேவிபட்டினம் அருகில் உள்ள நவபாஷாண கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்துசெல்கின்றனர். ஊராட்சி நிர்வாகத்திடமிருந்த கோயில் நிர்வாகம இந்து அற நிலையத்துறையிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. இருந்தும் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களுக்கு ஊராட்சி நிர்வாகம் நுழைவு கட்டணம் வசூல் செய்துவருகிறது. நீதிமன்ற உத்தரவை மீறிய நடவடிக்கை என்பதால் ஊராட்சி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் பக்தர்களிடம் நுழைவு கட்டணம் வசூல் செய்ய மாவட்ட நிர்வாகம் தடைவிதிக்க வேண்டும். தவறினால் விஷ்வ இந்து பரிஷத் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !