சுடலை ஆண்டவர் கோயிலில் 21ம் தேதி கொடை விழா துவக்கம்
திசையன்விளை : திசையன்விளை சுடலையாண்டவர் கோயில் ஆவணி பெருங்கொடைவிழா வரும் 21ம் தேதி துவங்குகிறது. தென்மாவட்டங்களில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று திசையன்விளை வடக்குத்தெரு சுடலையாண்டவர் கோயிலாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி 2ம் வெள்ளிக்கிழமையில் கொடை விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். நடப்பு ஆண்டு ஆவணி பெருங்கொடைவிழா வரும் 21ம் தேதி துவங்குகிறது. விழாவில் முதல் நாள் பூஜை, பள்ளி மாணவ, மாணவிகளின் விளையாட்டு போட்டி, பெண்களுக்கான கோலப்போட்டி, சிவகுமார் சமய சொற்பொழிவு, பல்சுவை கலைப்போட்டிகள், திரைப்பட இன்னிசை நிகழ்ச்சி ஆகியன நடக்கிறது. இரண்டாம் நாளில் பூஜை, நெல்லை தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கம் நடத்தும் இலவச மருத்துவ சிகிச்சை முகாம், தர்ம விநாயகம் சமய சொற்பொழிவு, பள்ளி மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சி, சுடலையாண்டவர் கலா மன்றம் சார்பில் சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கு பெறும் "உன்னோடு நான் சமூக நாடகம் ஆகியன நடக்கிறது. மூனறாம் நாளில் பூஜை, திசையன்விளை அரசினர் ஆரம்ப சுகாதார நிலையம் சித்தா பிரிவு நடத்தும் இலவச சித்த மருத்துவ முகாம், கம்ப்யூட்டர் போட்டி, கர்நாடக சங்கீதம், 1,008 திருவிளக்கு பூஜை, திரைப்பட பின்னணி பாடகர்கள் க்ரீஷ், வினிதா, முரளி பங்குபெறும் "மெகா மியூஸிக் நைட் 2011 நிகழ்ச்சி ஆகியன நடக்கிறது. நான்காம் நாளில் பூஜை, விவேகானந்தா கேந்திரம், நெல்லை அரவிந்த் கண் ஆஸ்பத்திரி இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம், சிறப்பு அலங்கார பூஜை, ராமச்சந்திரன் சமய சொற்பொழிவு, வில்லிசை, மாக்காப்பு, அலங்கார பூஜை, திரைப்பட பின்னணி பாடகிகள் அனிதா, லெட்சுமி பங்குபெறும் இன்னிசை நிகழ்ச்சி ஆகியன நடக்கிறது. ஐந்தாம் நாளில் பூஜை, பள்ளி மாணவர்களின் ஓவியப்போட்டி பெண்களுக்கான சமையல் போட்டி, கதிரேசன் சமய சொற்பொழிவு, இன்னிசை நிகழ்ச்சி, அற்புத விநாயகர் கோயிலில் இருந்து பால்குட பவனி, கரக கலை நிகழ்ச்சிகள், பாலாபிஷேக பூஜை, அலங்கார பூஜை, வில்லிசை, மகுடம் ஆகியன நடக்கிறது. ஆறாம் நாளில் அன்ன பூஜை, அன்னதானம், மன்னராஜா கோயிலில் இருந்து மஞ்சள்பெட்டி எடுத்து வருதல், உச்சிகால பூஜை, சுவாமி மஞ்சள் நீராடல், கந்தப்பன், உவரி துரைப்பாண்டியன் சமய சொற்பொழிவுகள், எஸ்.எஸ்.எல்.சி.,பிளஸ்2 அரசு பொதுத்தேர்வில் முதல் இரு இடம் பெற்ற திசையன்விளை பகுதி பள்ளி மாணவ, மாணவிகளுக்கும், விளையாட்டு, கம்ப்யூட்டர், ஓவியம், கலைப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி, பட்டிமன்றம், நடன நிகழ்ச்சி, இன்னிசை நிகழ்ச்சி, சிலம்பாட்டம், பின்னணி பாடகி தீபாமரியம் இன்னிசை நிகழ்ச்சி, சுவாமிக்கு விசேஷ அலங்கார பூஜை, வாணவேடிக்கை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை திசையன்விளை வடக்குத்தெரு ஆனந்தவிநாயகர், மன்னராஜா, சுடலையாண்டர் கோயில்களின் நிர்வாகி கோபால்ராஜ், பொருளாளர் செல்வராஜ் மற்றும் நிர்வாக குழுவினர் செய்து வருகின்றனர்.