பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் சுவாமிக்கு தீர்த்தவாரி
ADDED :3734 days ago
பரங்கிப்பேட்டை: தை அமாவாசையையொட்டி பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் சுவாமிக்கு கடற்கரையில் தீர்த்தவாரி நடந்தது. பரங்கிப்÷ பட்டை அடுத்த அகரத்தில் ஆதிமூலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் தை அமாவாசை அன்று ஆதிமூலேஸ்வரர் புதுப்பேட்டை கடற்கரையில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு தை அமாவாசையையொட்டி நேற்று முன்தினம் ஆதிமூலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமியை, புதுப்பேட்டை கடற்கரைக்கு எடுத்துச் சென்று தீர்த்தவாரி நடந்தது. ஏராமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.