புரவி எடுப்பு திருவிழா
ADDED :3680 days ago
மேலுார்: மேலுார் அருகே கம்பூரில் இளங்காமுடி அய்யனார் கோயில் திருவிழாவை முன்னிட்டு புரவி எடுப்பு திருவிழா நடந்தது.
இதை முன்னிட்டு பக்தர்கள் கடந்த 27 நாட்கள் விரதமிருந்தனர். இரண்டு நாட்கள் நடக்கும் இவ்விழாவில் தேனக்குடிபட்டி மற்றும் அய்வத்தாம்பட்டி உட்பட ஏழு கிராம மக்கள் கலந்து கொண்டனர். இரண்டு கிராமத்து குதிரைகள் முன்னே செல்ல பின்னாள் விவசாயம் செழிக்கவும், மக்கள் நோய் நொடி இல்லாமல் வாழவும், குழந்தை பாக்கியம் வேண்டி கொண்டவர்கள் 51 குதிரைகள் மற்றும் 151 சாமி சிலைகளை சுமந்து சென்றனர். குதிரை பொட்டலில் இருந்து பக்தர்கள் குதிரைகளை சுமந்து சென்று முத்துப்பிடாரி அம்மன் கோயில் முன் இறக்கினர். இன்று(பிப்.11) இரண்டு கி.மீ., துாரமுள்ள இளங்காமுடி அய்யனார் கோயிலுக்கு சாமிகளை கொண்டு செல்கின்றனர்.