வடமதுரை கும்பாபிஷேகம்
ADDED :3684 days ago
வடமதுரை: நாடுகண்டனூரில் நம்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் மாலை விஷ்வக்சேனர் பூஜையுடன் முதல் கால யாக பூஜை துவங்கியது.
நேற்று காலை நவ கலச பூஜையுடன் இரண்டாம் கால பூஜைகள் நடந்து கடம் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. வடமதுரை பக்த ஆஞ்சநேயர் கோயில் அர்ச்சகர் நாராயணன்அய்யங்கார் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார்.