காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :3684 days ago
குளித்தலை: கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த, பஞ்சப்பட்டி சுக்காம்பட்டியில் காளியம்மன், பகவதியம்மன், சர்வசக்தி மற்றும் விநாயகர் போன்ற சுவாமிகளுக்கு, பொதுமக்களால் புதிதாக கோவில் கட்டப்பட்டது.
இந்த கோவிலுக்கு, கும்பாபிஷேகம் விழா துவங்கியது. முன்னதாக, கணபதி புஜை, பைரவர் பூஜை, விக்னேஸ்வர் பூஜை, கோ பூஜை, திரிசக்தி ஹோமம், நாடி சந்தானம், ரட்சாபந்தனம், திரவிய ஹோமங்கள், தீபாராதனை, கும்ப தீர்த்தம் புறப்பாடு, கோபுர கும்பாபிஷேகம் மூல ஸ்தாபனம், கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் காளியம்மன், பகவதியம்மன், சர்வசக்தி மற்றும் விநாயகருக்கு சிறப்பு புஜை, சிறப்பு அர்ச்சனை மற்றும் ஆராதனை நடந்தது. முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவில், பஞ்சப்பட்டி, குளித்தலை, கடவூர், தரகம்பட்டி, கரூர், திருச்சி ஆகிய பகுதிகளிலிருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர்.