உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தி.மலை கோவில் குளத்துக்கு பூட்டு

தி.மலை கோவில் குளத்துக்கு பூட்டு

திருவண்ணாமலை: தீர்த்தவாரியின் போது, நான்கு பேர் பலியான அய்யங்குளத்தில், பக்தர்கள் நீராட போலீசார் தடை விதித்து, குளத்துக்கு பூட்டு போட்டு பூட்டியுள்ளனர். அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் அய்யங்குளத்தில், கடந்த 8ம் தேதி நடந்த தீர்த்தவாரியில், கூட்ட நெரிசலில் சிக்கி, நான்கு பேர் பலியாயினர். இது தொடர்பாக, கோவில் ஊழியர்கள், இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கோவில் இணை ஆணையர் விடுவிக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக, முழுமையான விசாரணை நடத்தி, அரசுக்கு அறிக்கை அளிக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். ஆர்.டி.ஓ., உமாமகேஸ்வரி விசாரணை நடத்தி வருகிறார். அதேபோல், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள், கோவில் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார். இதில், கோவில் நிர்வாகம் சார்பில், பாதுகாப்பு வழங்கக்கோரி எந்த துறைக்கும் கடிதம் அனுப்பாததும், முன்னேற்பாடுகள் குறித்து ஊழியர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடத்தாததும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில், நான்கு பேர் பலியான அய்யங்குளத்தில், பக்தர்கள் நீராட போலீசார் தடை விதித்து, குளத்துக்கு பூட்டு போட்டு பூட்டியுள்ளனர். மேலும் அங்கு, இரண்டு போலீஸ் எஸ்.ஐ., மற்றும் 20 போலீசார், தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !