உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரமலான் சிந்தனைகள்: இறைவனை மட்டும் புகழ்வோம்

ரமலான் சிந்தனைகள்: இறைவனை மட்டும் புகழ்வோம்

இன்றைக்கு இலக்கிய உலகமானாலும் சரி, கலையுலகமானாலும் சரி, அரசியல் உலகமானாலும் சரி.... அன்னையே, தாயே, தந்தையே, பிள்ளையே, தமிழே, உயிரே, தலைவரே... உம்மைப் போல் பூமியில் யாருமுண்டோ? என்று தகுதியில்லாதவர்களை எல்லாம் புகழ்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். பாராட்டு விழா நடத்துகிறார்கள். இப்படிப்பட்ட புகழுரைகளை நபிகள் நாயகம்(ஸல்) கண்டிக்கிறார். புகழ்பவர்களை நீங்கள் கண்டால் அவர்களின் வாயில் மண்ணை வாரி இறையுங்கள், என்கிறார்கள் அவர்கள்.இறைவன் மட்டுமே புகழ்ச்சிக்குரியவன். அவனால் உருவாக்கப்பட்ட மற்ற எந்த ஜீவனும் புகழ்ச்சிக்குரியதல்ல. தனிநபர்களைப் பற்றி புகழ்ந்து கவிதை இயற்றுபவன் மனதாரவா செய்கிறான்? காசுக்காக செய்கிறான். தகுதி இல்லாதவன் புகழப்பட்டால், புகழப்படுபவன் தன்னிடம் ஏதோ ஆற்றல் இருப்பதாக நினைத்து, முட்டாள்தனமாக செயல்பட்டு, தன்னையும் அழித்து, பிறரையும் அழித்துக் கொள்கிறான். குறிப்பாக தீயவர்கள் புகழப்படவே கூடாது. கொலை செய்து ஜெயிலுக்கு சென்றவன் வெளியே வரும் போது, அவனைப் புகழ்ந்து போஸ்டர் ஒட்டினால் இந்த உலகம் என்னாகும்? அவன் மேலும் மேலும் அதே தவறைச் செய்வான். ஒரு தீயவன் புகழப்படும் போது அல்லாஹ் கோபமடைகின்றான். அவனது அர்ஷ் (இறை அரியணை) நடுங்க ஆரம்பிக்கிறது, என்கிறது குர் ஆன். தீயவன் புகழப்படும் போது, இறைவனின் சிம்மாசனமே ஆட்டம் காணும் அளவிற்கு அவனுக்கு கோபம் வருகிறது என்றால், தகுதியற்றவர்களை புகழ்வதை உடனடியாக நிறுத்தி விட வேண்டும்.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.42 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.33 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !