வேளாங்கண்ணி தேவாலயம் அழகுப்படுத்தும் பணி தீவிரம்!
ADDED :5166 days ago
நாகப்பட்டினம் : நாகை அடுத்த வேளாங்கண்ணி மாதா கோவில் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு தேவாலயத்தை அழகுப்படுத்தும் பணி நடந்து வருகிறது. நாகை அடுத்த வேளாங்கண்ணி மாதா தேவாலய ஆண்டுத் திருவிழா வரும் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, செப்டம்பர் 8ம் தேதி, மாதாவின் பிறந்த நாள் விழா, கூட்டுப் பாடல் திருப்பலியுடன் நிறைவடையும். ஆண்டுத் திருவிழாவில் பங்கேற்க பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வருவர் என்பதால் அடிப்படை வசதிகளை தேவாலய நிர்வாகம் செய்து வருகிறது. பத்து நாட்கள் நடைபெறும் விழாவை முன்னிட்டு தேவாலய மேல், கீழ் கோவில்களில் நாள்தோறும் பல்வேறு மொழிகளில் திருப்பலி நடக்கும். திருவிழாவை முன்னிட்டு தேவாலய மேல், கீழ் கோவில்களில் வர்ணம் பூசப்பட்டு, மின்விளக்குகள் அமைத்து, அழகுப்படுத்தும் பணி நடந்து வருகிறது.