உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தி.மலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மகந்தியாச ஏகாதச ருத்ராபிஷேகம்!

தி.மலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மகந்தியாச ஏகாதச ருத்ராபிஷேகம்!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர்  கோவில் மூலவர் சன்னதி அருகே பரிகார பூஜை (மகந்தியாச ஏகாதச ருத்ராபிஷேகம்)  மற்றும் சிறப்பு யாகம்( அஸ்தர யாகம்) நடந்தது.

அருணாச்சலேஸ்வரர் கோவில் அருகே உள்ள அய்யங்குளத்தில் கடந்த 8ஆம் தேதி நடந்த  தீர்த்தவாரியில் கூட்டநெரிசல் காரணமாக நான்கு பேர் இறந்தனர். இதனையொட்டி அருணாச்சலேஸ்வரர்  கோவில் மூலவர் சன்னதி அருகே பரிகார பூஜை (மகந்தியாச ஏகாதச ருத்ராபிஷேகம்)  மற்றும் சிறப்பு யாகம்( அஸ்தர யாகம்) நடந்தது. கோவிலிலிருந்து சிவாச்சாரியார்கள் அய்யங்குளத்தில் புனித நீரை  ஊற்ற கொண்டு வந்தனர். உடன் கோவில் இணை ஆணையர் (பொறுப்பு ) வாசுதேவன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !