உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இருக்கன்குடி கோயிலில் தை கடைசி வெள்ளி:ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

இருக்கன்குடி கோயிலில் தை கடைசி வெள்ளி:ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

சாத்தூர்: இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் தை கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் கோயில் வளாகத்தில் பொங்கல் , முடிகாணிக்கை செலுத்தினர். பலர் அக்னிசட்டி , ஆயிரங்கண் பானை செலுத்தி வழிபட்டனர்.

பாதயாத்திரை: இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,தீபாராதனை என சிறப்பு வழிபாடுகளும் நடந்தன. விருதுநகர் ,மதுரை,திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரிஎன பல மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வாகனங்கள், பாதயாத்திரையாக வந்து அம்மனை தரிசித்தனர்.சிறப்பு பஸ்:சாத்தூர், கோவில்பட்டி, சிவகாசி, விருதுநகர் என பல பகுதிகளில் இருந்து கோயில் மேட்டிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !