சின்னாளபட்டி மாயம்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :3702 days ago
சின்னாளபட்டி: முன்னிலைக்கோட்டை ஊராட்சி ஆரியநெல்லூரில் மாயம்பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது.பிப்.10 அதிகாலையில் விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் யாக வேள்வி துவங்கின. இரவு யாகசாலை பிரவேசம், முதற்கால யாக பூஜைகள் நடந்தன. மறுநாள் காலை இரண்டாம் கால யாகபூஜைக்கு பிறகு புதிய விக்ரகங்களுக்கு கண் திறக்கப்பட்டது. மாலையில் மூன்றாம் கால யாகபூஜைகள், அஷ்டபந்தன சாற்றுதல் நடந்தன. நேற்று அதிகாலை நான்காம் கால யாகபூஜைகள் துவங்கின.
பிம்ப சுத்தி, ரக்ஷாபந்தனம், கடம்புறப்பாட்டிற்கு பிறகு, கோயில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் மாயம்பெருமாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மஹாஅபிஷேகம் நடந்தது. பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.