உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூவராகசுவாமி கோவிலில் பந்தக்கால் நடும் விழா

பூவராகசுவாமி கோவிலில் பந்தக்கால் நடும் விழா

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம், பூவராக சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி, பந்தக் கால் நடும் விழா நடந்தது.

கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணத்தில், பிரசித்திப் பெற்ற பூவராக சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் மகா கும்பாபிஷேகம், வரும் மார்ச் மாதம் 18ம் தேதி நடக்கிறது. இதற்காக, பந்தல் கால் நடும் விழா, நேற்று காலை 10:15 மணிக்கு, நடந்தது. முன்னதாக, மூலவர் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.  தொடர்ந்து அலங்கார யானைகள் மற்றும் நாதஸ்வர இசை முழங்க பந்தக் கால்கள்,  நகரின் நான்கு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.

பின், கோவில் முன்புறம்  சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, பந்தக் கால்கள் நடப்பட்டன.
நிகழ்ச்சியில், திருப்பணிக்குழுத் தலைவர் பூமாலை சண்முகம், தொழிலதிபர் அகர்சந்த், பேரூராட்சித்தலைவர் ஆதிலட்சுமி கலியமூர்த்தி, அ.தி.மு.க., ஒன்றிய செயலர் கலியமூர்த்தி, நகர செயலர் பூமாலை கேசவன், சிண்டிகேட் உறுப்பினர் பாலசுந்தரம், செயல் அலுவலர் சீனுவாசன் மற்றும் பக்தர்கள்  பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !