உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரி பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

புதுச்சேரி பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

புதுச்சேரி: புதுச்சேரியில் முத்தியால்பேட்டை காந்தி வீதியில் உள்ள தென்கலை சீனுவாச பெருமாள் கோவில் உள்ளிட்ட 3 கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.

முத்தியால்பேட்டை காந்தி வீதியில் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற  தென்கலை சீனுவாசப் பெருமாள், அலர்மேல்மங்கை தாயார், ரங்கநாதன், லட்சுமி நரசிம்மர், ஆஞ்ஜநேயர், உற்சவர் சன்னதி, கருடன்  சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு பக்கம் மகா மண்டபம்  மற்றும்  5 நிலை ராஜ கோபுரத்துடன்  கோவிலின் திருப்பணி முடிவடைந்து,  யாகசாலை பூஜைகள்  2 நாட்களுக்கு முன்பு துவங்கியது. நேற்று காலை மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் மூலவர் தென்கலை சீனுவாசப் பெருமாள், அலமேலு மங்கை தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் மகா தீபாராதனை நடந்தது.

நிகழ்ச்சியில் சபாநாயகர் சபாபதி, தி.மு.க.,  வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார், இந்து அறநிலைய துறை ஆணையர் தில்லைவேல் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !