உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூரிய கிரகணம்: திருமலை கோவில் மூடல்

சூரிய கிரகணம்: திருமலை கோவில் மூடல்

திருப்பதி: சூரிய கிரகணத்தை முன்னிட்டு, திருமலை ஏழுமலையான் கோவில், 13 மணி நேரம்
மூடப்படும் என, திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தேவஸ்தான அதிகாரி கூறியதாவது:மார்ச் 9ம் தேதி, காலை 5:47 மணி முதல், 9:08
மணி வரை, சூரிய கிரகணம் நடப்பதால், மார்ச் 8ம் தேதி, இரவு 8:30 மணி முதல், மார்ச் 9ம்
தேதி, காலை 10:00 மணி வரை, 13 மணி நேரம், ஏழுமலையான் கோவில் நடை சாற்றப்படும்.
காலை 10:00 மணிக்கு மேல், கோவில் நடை திறக்கப்பட்டு புண்ணியாவசனம், சம்ப்ரோக் ஷணம் உள்ளிட்ட வைதீக காரியங்கள் செய்யப்பட்ட பின், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.

இதை முன்னிட்டு, சூரிய கிரகணத்தன்று, சஹஸ்ர கலசாபிஷேகத்தை ரத்து செய்துள்ளது. மற்ற அனைத்து சேவைகளும், ஏழுமலையானுக்கு தனிமையில் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !