உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தெப்பக்குள சீரமைப்பு பணி: விரைவுபடுத்த கோரிக்கை

தெப்பக்குள சீரமைப்பு பணி: விரைவுபடுத்த கோரிக்கை

திருச்செங்கோடு: திருச்செங்கோடு-ஆனங்கூர் சாலையில், 400 ஆண்டு பழமையும், புராண சிறப்பும் கொண்ட தெப்பக்குளம் உள்ளது. திருச்செங்கோடு நகர மற்றும் சுற்றுப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை தீர்த்து வைத்தும், அர்த்தநாரீஸ்வரர் தெப்ப உற்சவம் நடக்கும் சிறப்பு பெற்றது.

சின்ன ஓங்காளியம்மன் கோவில் பூமிதி விழாவில், குண்டம் இறங்கும் பக்தர்கள் தெப்பக்குளத்தில் நீராடிய பின்னர் தான் குண்டம் இறங்குவர். இந்த தெப்பக்குளம் படிக்கட்டுகள் பலம் இழந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு சீரழிந்து உள்ளது. சீரமைப்பு பணிகள் துவங்கி பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகள் விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !