உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாமகிரிப்பேட்டை மாரியம்மனுக்கு பாலாபிஷேகம்

நாமகிரிப்பேட்டை மாரியம்மனுக்கு பாலாபிஷேகம்

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை மகளிர் ஆன்மிக குழு சார்பில், மாரியம்மனுக்கு பாலாபி ஷேகம் நடந்தது. நாமகிரிப்பேட்டை மகளிர் ஆன்மிக குழு சார்பில், ஆண்டுதோறும் தை மாதம் இறுதி வெள்ளிக்கிழமையன்று சிறப்பு பூஜைகள் நடக்கும். நேற்று, நடந்த விழாவில் பெருமாள்
கோவிலில் இருந்து புறப்பட்ட பால் குட ஊர்வலம் ஆத்தூர் பிரதான சாலை, நாமக்கல் சாலை
மற்றும் நகரின் முக்கிய வீதிவழியாக ஊர்வலம் சென்றது. இறுதியில் மாரியம்மனுக்கு, 108 பால்
குட அபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !