வராகி அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு
ADDED :3690 days ago
கீழக்கரை: உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் தை மாத நிறைவு வெள்ளியை
முன்னிட்டு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. கோயில் பிரகாரத்தில் உள்ள
அம்மிக்கல்லில் நேர்த்திக்கடன் செலுத்தும் ஏராளமான பெண்கள் மஞ்சள் அரைத்து,
மண்கலயத்தில் இட்டு, கோயிலின் நான்கு மாட வீதிகளிலும் சக்தி கோஷம் முழங்க வலம்
வந்தனர். தொடர்ந்து மஞ்சளால் அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. இரவு வராகி அம்மன் பூ
பல்லக்கில் வீதியுலா வந்தார். பெண்கள் பொங்கலிட்டு, நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.
ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.