/
கோயில்கள் செய்திகள் / அயோத்தி ராமர் கோயிலில் ஸ்ரீ ராமருக்கு ஆரத்தி: துணை ஜனாதிபதி, ஆளுநர் பங்கேற்பு
அயோத்தி ராமர் கோயிலில் ஸ்ரீ ராமருக்கு ஆரத்தி: துணை ஜனாதிபதி, ஆளுநர் பங்கேற்பு
ADDED :1 minutes ago
அயோத்தி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயிலில், நவம்பர் 7-ம் தேதியான சனிக்கிழமை துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் ஆளுநர் ஆனந்திபென் படேல் ஆகியோர் ஸ்ரீ ராம லல்லாவுக்கு பக்தியுடன் ஆரத்தி எடுத்தனர். தொடர்ந்து, கோயில் வளாகத்தில் தீபங்களையும் ஏற்றி வழிபட்டனர்.
கோயிலுக்கு வருகை தந்த அவர்களை, ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி ஜி மகராஜ் வரவேற்றார். இந்த நிகழ்வில் சுவாமி கமல்நயன் தாஸ் ஜி மகராஜ், ஆச்சார்யா மிதிலேஷ்நந்தினி சரண் ஜி மகராஜ், சுவாமி ஸ்ரீ ராஜ்குமார் தாஸ் ஜி மகராஜ், அறக்கட்டளை உறுப்பினர் மகந்த் தினேந்திர தாஸ் ஜி மகராஜ் மற்றும் அறங்காவலர்கள் கிருஷ்ண மோகன் ஜி, மதன் மோகன் பாண்டே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.