உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ‘தீய எண்ணங்களை எல்லாம் நீக்கி நல்ல எண்ணங்களை வளர்ப்போம்’: காமாட்சிபுரி ஆதினம்

‘தீய எண்ணங்களை எல்லாம் நீக்கி நல்ல எண்ணங்களை வளர்ப்போம்’: காமாட்சிபுரி ஆதினம்

கோவை: ‘‘தீபாவளி திருநாளில் தீய எண்ணங்களை நீக்கி நல்ல எண்ணங்களை வளர்ப்போம்,’’ என, கோவை காமாட்சிபுரி ஆதினம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் தெரிவித்துள்ளார்.


அவரது வாழ்த்துரை: தீபாவளி திருநாள் என்பது இருளை அகற்றி ஒளியை ஏற்றும் நன்னாள். அறியாமை என்னும் இருளை அகற்றி ஞானம் என்னும் ஒளியை நம் உள்ளங்களில் ஏற்றுவோம். தீய எண்ணங்களை நீக்கி நல்ல எண்ணங்களை வளர்ப்போம்.


அன்பு, கருணை, பொறுமை, ஒற்றுமை ஆகிய நற்பண்புகளை வாழ்வில் கடைப்பிடிப்போம். இறைவனின் திருவருளால் அனைவரின் இல்லங்களிலும் மகிழ்ச்சியும் மனநிறைவும் பெருகட்டும்.


குடும்பங்களில் ஒற்றுமையும் உறவுகளில் அன்பும் நிலைத்திடட்டும். ஏழை, எளியோருக்கு உதவி செய்து ஈகை என்னும் உயர்ந்த பண்பை வளர்ப்போம். குழந்தைகளின் வாழ்வில் கல்வி ஒளியும், இளைஞர்களின் வாழ்வில் நம்பிக்கை ஒளியும் பிரகாசிக்கட்டும். உலகெங்கும் அமைதியும் சகோதரத்துவமும் நிலவட்டும்.


நமது பாரம்பரியமும், பண்பாடும் அடுத்த தலைமுறைக்கும் சிறப்புடன் தொடரட்டும். தீப ஒளியைப்போல ஒவ்வொருவரின் வாழ்விலும் நம்பிக்கையும் நன்மையும் மலரட்டும். இறைவழிபாட்டுடன் இத்திருநாளை கொண்டாடி இறையருளை பெறுவோம். அனைவருக்கும் உடல் நலம், மன வளம், கல்வி வளம், செல்வ வளம் பெருகட்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !