அரங்கநாதர் கோவிலில் நாளை கொடியேற்றம்
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், மாசிமகத் தேரோட்ட கொடியேற்றம்
நாளை நடக்க உள்ளது.
காரமடையில் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலமான அரங்கநாதர் கோவில் உள்ளது. இங்கு
ஒவ்வொரு ஆண்டும் மாசிமகத் தேரோட்டம் நடக்கிறது. இந்தாண்டு, தேர்த்திருவிழா
கொடியேற்றம் நாளை பகல், 11:00 மணிக்கு நடைபெறுகிறது. தொடர்ந்து, இரவு
அன்னவாகனத்தில் உற்சவமும், 17ம் தேதி இரவு சிம்ம வாகனம், 18ல் அனுமந்த வாகனம், 19ல் கருடசேவை உற்சவம் நடைபெற உள்ளது.
வரும் 20ம் தேதி காலை, 11:00 மணிக்கு பெட்டத்தம்மன் அழைப்பும், 21ல் அதிகாலை 5:30
மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவு யானை வாகனத்தில் சுவாமி திருவீதி உலாவும்
நடக்கிறது. 22ல் காலை, 5:30 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாதர் சுவாமி தேருக்கு எழுந்தருளுகிறார். அன்று மாலை, 3:30 மணிக்கு தேரோட்டம் நடக்க உள்ளது. 23ல் குதிரை வாகனத்தில் பரிவேட்டையும், 24ல் சேஷவாகனத்தில் தெப்பத்திருவிழாவும், 25ல் சந்தான சேவை சாற்றுமுறை உற்சவமும் நடக்கிறது.