உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூண்டி கோவிலில் 22ல் மகாமக விழா

பூண்டி கோவிலில் 22ல் மகாமக விழா

திருப்பூர்: திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலில், வரும், 22ல், மகாமக விழா
நடைபெறுகிறது.

திருமுருகநாத சுவாமி கோவில் வளாகத்தில், அறநிலையத்துறைக்கு சொந்தமான, மகாமக குளம் உள்ளது. 12 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமக விழாவின்போது, இக்குளத்தில், கங்காதேவி தீர்த்த வடிவில் குளத்தில் நீராடி, திருமுருகநாதரை வணங்கிச் செல்வதாக ஐதீகம். அந்நாளில், இக்குளத்தில் நீராடினால், கங்கை, காசி, ராமேஸ்வரம் போன்ற புண்ணிய தலங்களில் நீராடியதற்கான பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

தமிழகத்தில், கும்பகோணத்துக்கு அடுத்ததாக, திருமுருகன்பூண்டி குளத்தில் மட்டுமே, மகாமக விழா நடைபெறுகிறது. இக்குளம் அருகே, விநாயகர் கோவில் முன், மகாமகத்தின் போது தீர்த்தப்பால், தானாக ஊற்றெடுக்கும் ஊற்றுக்குழியும் உள்ளது. இத்தகைய சிறப்பு பெற்ற, திருமுருகன்பூண்டி மகாமக குளத்தில், வரும், 22ம் தேதி காலை, 6.30க்கு, மகாமக விழா நடைபெறுகிறது. அன்று அதிகாலை, சிறப்பு பூஜை நடத்தி, புண்ணிய தீர்த்தத்தை குளத்தில் கலக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன்பின், பக்தர்கள் புனித நீராடுவர். 24ம் தேதி, மாலை, 6:00 மணிக்கு தெப்ப உற்சவம் நடக்கிறது.

விழாவை முன்னிட்டு, குளத்தின் சுற்றுச்சுவருக்கு வண்ணம் பூசுதல், தண்ணீர் நிரப்புதல், பக்தர்கள் செல்வதற்கான பாதை அமைத்தல், வாகன நிறுத்தம், பாதுகாப்பு வசதி நடந்து
வருகின்றன. இதற்கான ஏற்பாடுகளை, பசுமை பாரதம் திருப்பூர் மாவட்ட தலைவர் உமாசங்கர்,  "ஜி.யூ.எஸ்., கிளாத்திங் கம்பெனி நிர்வாக இயக்குனர் சாந்தி, ஓம் பசுமை அங்காடி, திருப்பூர் சைவ சித்தாந்த சபை, திருமுருகநாத சுவாமி கோவில் நிர்வாகத்தினர் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !