உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தென்னேரி வரதராஜ பெருமாள் கோயிலில் நாளை தெப்போற்சவம்

தென்னேரி வரதராஜ பெருமாள் கோயிலில் நாளை தெப்போற்சவம்

வாலாஜாபாத்: தாதசமுத்திர தெப்போற்சவம், நாளை (17ம் தேதி)  தென்னேரி கிராமத்தில் கோலாகலமாக நடைபெற உள்ளது.

வாலாஜாபாத் அடுத்த தென்னேரி கிராமத்தில், ஆண்டுதோறும் தாதசமுத்திர தெப்போற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு,  91வது ஆண்டு தெப்போற்சவத்தை முன்னிட்டு  நாளை, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கண்ணாடி பல்லக்கில் எழுந்தருளி, தென்னேரி, அயிமிச்சேரி, நாவிட்டான்குளம், திருவங்காரணை, குண்ணவாக்கம், மலையடிவாரம், அகரம் ஆகிய கிராமங்களுக்கு வீதி உலா சென்று, இரவு, தென்னேரி கிராமத்திற்கு வந்தடைவார். அங்கு, அவருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் அபிஷேகம் நடைபெறும். அதன் பின், இரவு, 10:00 மணியளவில், மலர் அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட தென்னேரி தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்த தெப்போற்சவத்திற்கான  ஏற்பாடுகளை,  ராஜரத்தின நாயுடு வகையாறாவில் பாபு நாயுடு செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !