உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரம் பெருமாள் கோவிலில் ரத சப்தமி கருடசேவை

விழுப்புரம் பெருமாள் கோவிலில் ரத சப்தமி கருடசேவை

விழுப்புரம்: விழுப்புரம் பெருமாள் கோவிலில், ரதசப்தமி மகோற்சவத்தில் கருட சேவை நடந்தது.

விழுப்புரம் ஜனகவல் லிதாயார் சமேத வைகுண்டவாசப் பெருமாள் கோவிலில் நேற்று ரதசப்தமி மகோற்சவம் நடந்தது. காலை 6:00 மணிக்கு பெருமாள் சூரியபிரபை வாகனத்தில் கோவிலை வலம் வந்தார். காலை 9:00 மணிக்கு அனுமந்தவாகனத்திலும், 10:30 மணிக்கு ஷேஷ வாகனத்திலும், மதியம் 12:30 மணிக்கு கருடசேவையில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து மாலை 4:00 மணிக்கு யானை வாகனத்திலும், மாலை 5:30 மணிக்கு கற்பகவிருட்சம், இரவு 7:00 மணிக்கு சந்திரபிரபை வாகனத்திலும் பெருமாள் கோவிலை வலம் வந்தார். அப்போது ஆயிரக் கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் சரவணன், செயல் அலுவலர் முத்துலட்சுமி, பட்டாச்சாரியார் வாசு மற்றும் திருமஞ்சன கைங்கர்யதாரர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !