மாமல்லபுரத்தில் 22ல் மாசி மக தீர்த்தவாரி
ADDED :3674 days ago
மாமல்லபுரம்: மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில், வரும் 21ம் தேதி, தெப்ப உற்சவம் மற்றும் 22ம் தேதி மாசி மக தீர்த்தவாரி நடைபெற உள்ளது.மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவில், 108 வைணவ தலங்களில், 63வது தலமாக விளங்குகிறது. புண்டரீக முனிவர், பாற்கடல் இறைவனை அடைய, கடலில் பாதை ஏற்படுத்தி கடந்து செல்ல, கடலில் நீரை இறைத்தபோது, இறைவனே தன் கைகளால் கடல்நீரை இறைத்து, முனிவருக்கு காட்சியளித்தார். இத்தகைய தலத்தில், ஸ்தலசயன பெருமாள், மாசி மக நாளில், கடலில் புனித நீராடி உற்சவம் காண்பார். தற்போது, வரும் 21ம் தேதி இரவு, திருக்குளத்தில் தெப்பத்தில் வலம் வந்து, 22ம் தேதி காலை, கருட வாகனத்தில் கடற்கரை சென்று, கடலில் புனித நீராட உள்ளார்.