எஸ்.வி.மங்கலம் கோயில் சுவாமி திருக்கல்யாணம்
ADDED :3749 days ago
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே எஸ்.வி.மங்கலம் ருத்ரகோடீஸ்வரர்- ஆத்மநாயகி அம்மன் கோயில் மாசி மக திருவிழா சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. கோயில் முன், விநாயகர் சன்னதியில் யாகசாலைப்பூஜை நடந்தது.சுவாமி அம்மன் எழுந்தருளினர். மாலை மாற்றும் நிகழச்சி நடந்தது.கோயில் மண்டபத்தில் உமாபதி சிவாச்சாரியார்தலைமையில் சுவாமிஅம்மன் திருக்கல்யாணம் நடந்தது.அன்னதானம் வழங்கப்பட்டது.இக்கோயிலுக்கு ஐந்து கோயில் தேவஸ்தானம் சார்பில் இலுப்பை,வாகை மரங்களில் புதிய தேர் உருவாக்கப்பட்டது.திருச்சி பெல் நிறுவனம் தயாரித்த இரும்பு சக்கரங்கள் பொருத்தப்பட்டு குன்றக்குடி பொன்னம்பல அடிகள் முன்னிலையில் வெள்ளோட்டம் நடந்தது.பக்தர்கள் பங்கேற்றனர்.