உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரசிகர்களை மெய்மறக்கச் செய்த செம்பை சங்கீத உற்சவ விழா!

ரசிகர்களை மெய்மறக்கச் செய்த செம்பை சங்கீத உற்சவ விழா!

பாலக்காடு: செம்பை பார்த்தசாரதி கோவில் ஏகாதசி திருவிழாவையொட்டி நடந்த சங்கீத உற்சவம், ரசிகர்களை மெய் மறக்கச் செய்தது.

கேரளா, பாலக்காடு அருகே கோட்டாயி பார்த்தசாரதி கோவில் ஏகாதசி திருவிழா, பிப்.,14ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து நடந்த சங்கீத உற்சவத்தில், இசைக் கலைஞர்கள் பங்கேற்று சங்கீத ஆராதனை செய்தனர். ஏகாதசி தினமான நேற்று காலை 8:30 மணிக்கு கோதண்டராம பாகவதர் தலைமையில் உஞ்சவிருத்தி பஜனை நடந்தது. மண்ணுார் ராஜகுமாரனுண்ணி, சதனம் ஹரிகுமார், வெள்ளிநேழி சுப்ரமணியன் தலைமையில் செம்பை நினைவு மண்டபத்தில், ஏராளமான இசைக்கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனை இசைத்தனர். மாலை, புவனா ராமசுப்புவின் சங்கீத ஆராதனையும், செம்பக அந்தராமன், பிரகாஷ் உள்ளிட்டோரின் கச்சேரிகளும் ரசிகர்களை மெய்மறக்கச் செய்தன. இரவு 8:30 மணிக்கு செம்பையின் சீடரும், கர்நாடக இசைக்கலைஞருமான ஜேசுதாஸ் நடத்திய சங்கீத ஆராதனையை, ஆயிரக்கணக்கானோர் ரசித்தனர். இரவு, ஜயன் கச்சேரியுடன் சங்கீத உற்சவ விழா நிறைவுபெற்றது. பார்த்தசாரதி கோவிலில் இன்று நடக்கும் சிறப்பு பூஜைகளுடன் ஏகாதசி உற்சவம் நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !