உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூர் மாசி திருவிழா பறவைக்காவடியுடன் கேரள பக்தர்

திருச்செந்தூர் மாசி திருவிழா பறவைக்காவடியுடன் கேரள பக்தர்

துாத்துக்குடி: திருச்செந்துார் மாசி திருவிழாவில், கேரள பக்தர் ஒருவர், பறவைக்காவடி எடுத்து வந்தார். மாசி திருவிழா, பிப்., 13ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, 10 நாட்கள் திருவிழா நடக்கிறது. கேரளாவில் இருந்து பக்தர் ஒருவர், 35 ஆண்டுகளாக பறவைக்காவடி எடுத்து வருகிறார். நேற்று, அவருடன் வந்த பக்தர்கள் பால்குடம், வேல் அலகும் குத்தி வந்தனர்.இதே போல் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை பகுதியில் இருந்து பல்வேறு பக்தர்கள், 12 அடி, 15 அடி நீள வேல் அலகு குத்தி வந்தனர். நேற்று காலை, 9:00 மணிக்கு, ஆறுமுகப்பெருமான் கோரதம் வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார். இரவு, உருகு சட்ட சேவை நிகழ்ச்சியும் நடந்தது. நாளை அதிகாலை, பெரிய வெள்ளி சப்பரத்தில், சுவாமி வெள்ளை சார்த்தி; பகல், 11:00 மணிக்கு, பச்சை சார்த்தி எழுந்தருளுகிறார். 22ம் தேதி காலை, 6:30 மணிக்கு, ரதவீதி வழியாக தேரோட்டம்; மாலை தெப்ப உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !