திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் மாசிவிழாவில் பூக்குழி விழா
ADDED :3680 days ago
திண்டுக்கல்: திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசி பெருவிழாவில் இன்று பூக்குழி திருவிழா நடக்க உள்ளது.திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசிபெருவிழா கடந்த பிப். 4ல் துவங்கியது. பூ அலங்காரம், பூச்சொரிதல், சுவாமி சாட்டுதல், கொடியேற்றம், நாகல்நகர் புறப்பாடு, மண்டகப்படி வீதிஉலாக்கள் நடந்து வருகிறது. நேற்று மின் அலங்கார வீதியுலா நடந்தது. நேற்று மின் அலங்கார ரத ஊர்வலம் மேற்கு ரதவீதி, கலைக்கோட்டு விநாயகர் கோயில், பென்சனர் தெரு, கோபால சமுத்திர தெரு, கிழக்குரத வீதி, தெற்குரத வீதி வழியாக கோயில் அடைந்தது. பலஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று பிற்பகல் 2.30 மணிக்கு பூக்குழி விழா, இரவு 8:00 மணிக்கு அம்மன் வீதிவுலா நடக்க உள்ளது.