திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவில் கொடிமரம் பாலாலயம்
ADDED :3680 days ago
திருப்பூர்: திருப்பூர் ஈஸ்வரன் கோவிலில், கொடிமரம் பாலாலயம் இன்று நடக்கிறது. திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், மார்ச், 18ல் நடைபெறுகிறது. இதையொட்டி, கோவிலில் பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிதாக தங்க முலாம் பூசிய கொடிமரம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக, தற்போதுள்ள கொடிமரம் பாலாலயம் செய்யும் நிகழ்ச்சி, இன்று காலை, 9:45 முதல், 10:15 வரை நடக்கிறது.