குண்டம் நிகழ்ச்சிக்கு முகூர்த்தக்கால் நடும் விழா
ADDED :3700 days ago
ஈரோடு: ஈரோடு பெரியமாரியம்மன், சின்னமாரியம்மன், வாய்கால் மாரியம்மன் கோவில் பங்குனி மாத குண்டம் தேர்த்திருவிழா, மார்ச், 15ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கி, ஏப்.1ம் தேதி மறு பூஜையுடன் நிறைவடைகிறது. இதற்காக முகூர்த்தக்கால் அமைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதற்காக பிரத்யேகமாக கொண்டு வரப்பட்ட பச்சை மூங்கிலில் மலர்சரம் சுற்றி, பெரிய
மாரியம்மன் கோவில் கருவறை முன்பு வைக்கப்பட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டு நடப்பட்டது. நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் ராஜா, பணியாளர்கள் கோவிந்தராஜ், கல்யாணசுந்தரம்
உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.