உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவீதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

திருவீதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

சென்னை:அபிராமபுரம், குருபுரம், திருவீதி அம்மன் கோவிலில், மகா கும்பாபிஷேகம் நேற்று விமர்சையாக நடந்தது. கும்பாபிஷேகம் முடிந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.மந்தைவெளி அபிராமபுரம் திருவீதி அம்மன் கோவிலில், 165ம் ஆண்டு ஆடி திருவிழா நடக்கிறது. இதையொட்டி, நேற்று காலை 7.30 மணிக்கு, வேதபாராயணத்துடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் துவங்கின. இதைத் தொடர்ந்து, வரும் 19ம் தேதி காப்பு கட்டுதல், சக்தி கரக ஊர்வலம் ஆகிய நிகழ்ச்சிகளும், 21ம் தேதி பக்தர்களுக்கு கூழ் வார்த்தல், அன்னதான நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அன்று இரவு 9 மணிக்கு விநாயகர், முருகன், திருவீதி அம்மன் வீதி உலா நடக்கிறது. 22ம் தேதி பராம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.விழா ஏற்பாடுகளை ஊர் தலைவர் சற்குண சேகர், கோவில் நிர்வாக அதிகாரிகள் குமரேசன்,சங்கர், தயாளன், குமார் ஆகியோர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !