உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலக அமைதி வேண்டிகஞ்சிக் கலய ஊர்வலம்

உலக அமைதி வேண்டிகஞ்சிக் கலய ஊர்வலம்

திட்டக்குடி:திட்டக்குடி அருகே ஆதிபராசக்தி ஆன்மிக தொண்டு இயக்கம் சார்பில் உலக அமைதி வேண்டி கஞ்சிக் கலய ஊர்வலம் நடந்தது.திட்டக்குடி அடுத்த பெருமுளை கிராமத்தில் ஆதிபராசக்தி தொண்டு இயக்கம் சார்பாக உலக அமைதி வேண்டியும், இயற்கைவளம், மக்களிடையே மனிதநேயம் வளரவும் கஞ்சிக்கலய ஊர்வலம் நடந்தது. இதையொட்டி குரு பூஜை, விநாயகர் பூஜை, பஞ்சபூத வழிபாடு, நவக்கிரக பூஜை நடந்தது.கஞ்சிக் கலய ஊர்வலத்தை வழிபாட்டு மன்றத் தலைவர் லட்சுமி தனபால் துவக்கி வைத்தார். ஊர்களின் அனைத்து வீதிகளின் வழியாக ஊர்வலம் அம்மன் கோவிலுக்குச் சென்றது. இருநூறு பேருக்கு அன்னதானம் வழங்கப் பட்டது. சங்கீதா, வளர்மதி, கார்த்திக் கேயன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !