செண்பகவல்லியம்மன் கோயிலில் சமபந்தி விருந்து
ADDED :5534 days ago
கோவில்பட்டி:சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் சமபந்தி விருந்து நடந்தது.கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் நடந்த சுதந்திரதின பொதுவிருந்தை முன்னிட்டு காலையில் சுவாமி அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும், சிறப்பு அபிஷேகங்களும், விஷேச தீபாராதனைகளும் நடந்தது. பின்னர் மதியம் சமபந்திவிருந்து நடந்தது. விழாவில் ஆர்டிஓ., பொன்னியின் செல்வன், தாசில்தார் காளிமுத்து, கோயில் ஆய்வாளர் சுப்பிரமணியன், அதிமுக நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர் நாகராஜன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.