பவானியம்மன் கோவிலில் திரண்ட பக்தர்களால் நெரிசல்
ADDED :7 hours ago
ஊத்துக்கோட்டை: விடுமுறை நாளான நேற்று, பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில் அதிகளவு பக்தர்கள் திரண்டதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தமிழகத்தில் உள்ள முக்கிய அம்மன் கோவில்களில், பெரியபாளையம் பவானியம்மன் கோவில் பழமை வாய்ந்தது.
ஒவ்வொரு வாரமும் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் சென்று, அம்மனை தரிசனம் செய்வர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமானதால், காலை முதலே பக்தர்கள் திரண்டனர்.
அதிகளவு வாகனங்களில் பக்தர்கள் குவிந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கோவிலுக்கு சென்ற பக்தர்கள் பொங்கல் வைத்தும், அலகு குத்தியும், வேப்ப இலை அணிந்தும், தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.