குட்டூர் அண்ணாமலையார் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு பூஜை
ADDED :2 minutes ago
நத்தம்; நத்தம் அருகே குட்டூர் அண்ணாமலையார் கோவிலில் நடராஜருக்கு ஆனி உத்திரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி நடராஜருக்கு செண்பகபூ, ரோஜா, மாலைகளை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பால், பழம், இளநீர், திருமஞ்சனம், தேன், சந்தனம் உள்ளிட்ட 32 வகையான அபிஷேகங்களும், மஹா தீபாராதனைகளும் நடந்தது.இதில் சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.