விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம்; நடராஜர் வீதியுலா
ADDED :42 minutes ago
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நடந்த ஆனி திருமஞ்சன விழாவில், நடராஜர் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனத்தையொட்டி நேற்று காலை ஆழத்து விநாயகர், சுவாமி, அம்பாள், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபஷேக ஆராதனை நடந்தது. காலை 11:00 மணியளவில், சிவகாமசுந்தரி உடனுறை நடராஜர் சுவாமி உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பல்லக்கில் சிறப்பு அலங்காரத்தில் நடராஜர் எழுந்தருளியதும், மகா தீபாராதனை நடந்தது. பின்னர், நான்கு மாடவீதிகள் வழியாக நடராஜர் சுவாமி வீதியுலா வந்து அருள்பாலித்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.