ஆனித் திருமஞ்சன தரிசன விழாவையொட்டி நந்தனார் பட ஊர்வலம்
ADDED :6 hours ago
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசன விழாவையொட்டி நந்தனார் வீதி உலா இன்று நடந்தது.
சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசன விழாவையொட்டி, நாயன்மார்களில் ஒருவரான நந்தனார் உருவ படம் ஊர்வலம் ஓமக்குளம் நந்தனார் மடம் சவுந்தரநாயகி சமே சிவலோகநாதர் ஆலயத்தில் இருந்து புறப்பட்டது. நடாரஜர் கோயிலை சுற்றியுள்ள நான்கு முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து, மீண்டும் மடத்தை அடைந்தது. கீழ சன்னதியில், நந்தனாருக்கு பொது தீட்சிதர்கள் சார்பில் வரவேற்பு அளித்து சிறப்பு செய்யப்பட்டது. ஊர்வலத்தில் நந்தனார் கல்விக் கழக தலைவர் மணிரத்தினம், பொருளாளர் ஜெயச்சந்திரன், செயலாளர் திருவாசகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.