வீரபாஞ்சாலி திரவுபதியம்மன் படுகளம் நிகழ்வு விமரிசை
மதுராந்தகம்: மொறப்பாக்கம் வீரபாஞ்சாலி திரவுபதி அம்மன் கோவிலில், படுகளம் நிகழ்வு நேற்று விமரிசையாக நடந்தது.
மதுராந்தகம் அருகே மொறப்பாக்கம் கிராமத்தில் வீரபாஞ்சாலி திரவுபதி அம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலில் மஹா-பாரத திருவிழா, மே, 28ல் கணபதி ஹோமம், கங்கை பூஜை மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. அன்று முதல், 18 நாட்கள் மாலையில் மஹாபாரத சொற்பொழிவும், மஹாபாரத இதிகாச நாடகங்களும் நடந்து வருகின்றன.
முக்கிய நிகழ்வாக, வீர பாஞ்சாலி அம்மன் வில் விஜயன் திருக்கல்யாணமும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக, படுகளம் நிகழ்ச்சி நேற்று விமரிசையாக நடந்தது.
பின், மாலையில் நடந்த தீ மிதி விழாவில், காப்பு அணிந்து விரதமிருந்த பக்தர்கள், தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்நிகழ்வில் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.