வனதேவதை கோவில் மகா கும்பாபிஷேகம்
ADDED :7 hours ago
வால்பாறை: வால்பாறை, கல்லார்குடி தெப்பக்குளமேடு மலைக்கிராமத்தில் உள்ள, வனதேவதை கோவிலின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா, கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில், 17ம் தேதி பல்வேறு கோவில்களிலிருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்த குடங்களை பக்தர்கள் கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
அதனை தொடர்ந்து, 18ம் தேதி காலை, கணபதி ஹோமம், நாடிசந்தனம், ஸ்ரீருத்ரஏகாதசி, ஸ்ரீருத்ரஹோமம், பூர்ணாஹுதி ஆகிய பூஜைகள் நடந்தது. அதன்பின், தீர்த்தக்குடம் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு விமானகோபுர கலசங்களுக்கு மகா கும்பாஷேகம் நடைபெற்றது.
விழாவில், பல்வேறு செட்டில்மென்ட் பகுதிகளை சேர்ந்த பழங்குடியின மக்கள் கலந்து கொண்டனர். மதியம், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கல்லார்குடி பழங்குடியின மக்கள் செய்திருந்தனர்.