உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயிலில் சங்காபிஷேகம்

கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயிலில் சங்காபிஷேகம்

கன்னிவாடி: மாசி மகம் திருவிழாவை முன்னிட்டு, பிப்.,22ல் கன்னிவாடி சோமலிங்கசுவாமி
கோயிலில் 108 சங்காபிஷேகம் நடக்க உள்ளது.கன்னிவாடிபழநி ரோட்டில், சோமலிங்கபுரம்
மலைக்குன்றில் சோமலிங்கசுவாமி கோயில் உள்ளது. பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி,
சிவராத்திரி மட்டுமின்றி, தற்போது பிற நாட்களிலும் பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது.

மாசி மகத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு
வருகிறது. கோயில் நிர்வாகி ஆண்டவர் கூறுகையில், ""மாசி மகம் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் நடக்கிறது. முக்கிய அம்சமாக, இந்தாண்டு பவுர்ணமியுடன் வரும் மகம் நட்சத்திரம் காரணமாக உலக நன்மையை வலியறுத்தி 108 சங்காபிஷேகம் நடக்க உள்ளது. காலை 8 மணிமுதல் 30 வகை திரவிய அபிஷேகம் செய்யப்பட்டு, நாகாபரண அலங்காரம் சாற்றுதல் நடைபெறும். மெய்கண்ட சித்தர் குகையில், வேதி தீர்த்தம் மூலம் சிறப்பு சங்காபிஷேகம் நடக்க உள்ளது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !