திருச்செந்தூர் மாசித்திருவிழா தேரோட்டம்
துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் முருகன் கோயிலில், மாசித்திருவிழா தேரோட்டம் நேற்று காலை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருச்செந்துார் முருகன் கோயிலில் மாசித்திருவிழா பிப்., 13 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 நாள் விழாவில் சுவாமி, அம்மன் தனித்தனி வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பத்தம் நாளான நேற்று காலை 6.30 மணிக்கு விநாயகர் குமரவிடங்க பெருமான், வள்ளி, தெய்வானையுடன் தேருக்கு எழுந்தருளினர். விநாயகர் தேர் 6.30 க்கும் புறப்பட்டு,ரத வீதிகள் வழியாக வலம் வந்தது. 7.10 மணிக்கு நிலைக்கு வந்தது.குமரவிடங்க பெருமான், வள்ளி தெய்வானை தேர் 7.15 க்கு புறப்பட்டு,9.25 க்கு நிலைக்கு வந்து சேர்ந்தது. தெய்வானை அம்பாள் தேர் 9.30க்கு புறப்பட்டு பகல் 11 மணிக்கு நிலைக்கு வந்து சேர்ந்தது. எராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (பிப்.,23) இரவு தெப்பத்திருவிழா நடக்கிறது.