உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜகுளத்தில் வரதராஜ பெருமாள் தெப்போற்சவம் கோலாகலம்

ராஜகுளத்தில் வரதராஜ பெருமாள் தெப்போற்சவம் கோலாகலம்

வாலாஜாபாத் : ராஜகுளம் கிராமத்தில், வரதராஜ பெருமாள் தெப்போற்சவம் சிறப்பாக நடந்தது. காஞ்சிபுரம் அடுத்த, ராஜகுளம் கிராமத்தில், மாசி மாத பவுர்ணமி தோறும், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் தெப்போற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டின், 23வது ஆண்டு தெப்போற்சவத்தை முன்னிட்டு, நேற்று முன் தினம் காலை, ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன், காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள், கண்ணாடி பல்லக்கில் எழுந்தருளி, நத்தப்பேட்டை, வையாவூர், கவுரியம்மன்பேட்டை வழியாக, ராஜகுளத்திற்கு வந்தடைந்தனர். அதையடுத்து, மூவரும் மீண்டும் கண்ணாடி பல்லக்கில், சிட்டியம்பாக்கம், இலுப்பப்பட்டு, பழைய இலுப்பப்பட்டு உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று, மாலை, 6:00 மணிக்கு, ராஜகுளம் மண்டபத்தை அடைந்தனர். பின், மூவருக்கும், சிறப்பு திருமஞ்சனம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து, இரவு, 7:00 மணிக்கு, மலர் மற்றும் மின் விளக்குகளால், அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், ஸ்ரீதேவி, பூதேவியுடன் காஞ்சி வரதராஜப்பெருமாள் எழுந்தருளினர். ஏராளமானோர் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !