உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதியம்மனுக்கு இன்று திருக்கல்யாணம்

திரவுபதியம்மனுக்கு இன்று திருக்கல்யாணம்

ஆர்.கே.பேட்டை : அக்னி வசந்த உற்சவத்தில், திரவுபதியம்மனுக்கு இன்று மாலை, திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. வரும், 28ம் தேதி காலை, துரியோதணன் படுகளமும், மாலையில், தீமிதி திருவிழாவும் நடைபெறும். பொதட்டூர்பேட்டை திரவுபதியம்மன் கோவில் அக்னி வசந்த உற்சவம், கடந்த 12ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. 18ம் தேதி முதல், தினசரி இரவு 10:00 மணிக்கு, வில் வளைப்பு, ராஜசுய யாகம், பகடை துகில், அர்ச்சுணன் தபசு, கிருஷ்ணன் துாது உள்ளிட்ட தெருக்கூத்து நடந்து வருகிறது. கோவில் வளாகத்தில், பிற்பகல் 2:00 மணிக்கு, மகாபாரத சொற்பொழிவு நடக்கிறது.இன்று மாலை 5:00 மணிக்கு, திரவுபதியம்மன் திருக்கல்யாண நிச்சயதார்த்தமும், இரவு 11:00 மணிக்கு, திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது. முன்னதாக, மாலை 6:00 மணிக்கு, அம்மன் வீதியுலா எழுந்தருளுகிறார். வரும், 28ம் தேதி, காலை 10:00 மணிக்கு, துரியோதணன் படுகளமும், மாலை 6:00 மணிக்கு, தீமிதி திருவிழாவும் நடைபெற உள்ளது. விழாவை ஒட்டி, ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி, விரதம் மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !