உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

வாழப்பாடி: வாழப்பாடி செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வரும், 26ம் தேதி நடக்கிறது. நாளை காலை, 10 மணிக்கு, வாழப்பாடி செல்வமுத்து மாரியம்மன் கோவிலில் இருந்து, உற்சவ மூர்த்தி சுவாமி சிலைகள் மற்றும் தீர்த்தக்குடம், முளைப்பாலி சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை, 6 மணிக்கு விநாயகர் வழிபாடு, சரஸ்வதி பூஜை, கணபதி ஹோமம், யாக பூஜை நடக்கிறது. வரும், 26ம் தேதி அதிகாலை, 5 மணிக்கு இரண்டாம் காலவேள்வி கணபதி பூஜை, நவக்கிரக பூஜை, சுவாமிகளுக்கு கண் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. காலை, 9 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !