வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசிமக தீர்த்தவாரி விழா
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் கீழையூர் வீரட்டானேஸ்வர் கோவிலில் நேற்று நடந்த மாசிமக தீர்த்தவாரியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருக்கோவிலூர் கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசிமக திருவிழா, கடந்த 10 நாட்க ளாக நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று தீர்த்தவாரி நடந்தது. அலங்கரிக்கப்பட்ட சிவன் உமா கவுரி சுவாமிகளான சோமஸ் கந்தர் சிறப்பு அலங்காரத்துடன் தீர்த்தவாரி மண்டபத்தில் எழுந்தருளினர். மதியம் 2:30 மணிக்கு திரிசூலத்தில் ரிஷபாவுடன் தென்பெண்ணையில் தீர்த்தவாரி வைபவம் நடந் தது. நமச்சிவாயா கோஷத்துடன் ஏராளமான பக்தர்கள் தென்பெண்ணையில் புனித நீராடினார். இதனையடுத்து தீர்த்தவாரி மண்டபத்தில், சோமஸ் கந்தர்க்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. சாத்தனூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட, தண்ணீர் தென்பெண்ணையில் பெருக்கெடுத்து ஓடுவதுடன், மகாமக ஆண்டு என்பதால், நேற்று நடந்த தீர்த்தவாரியல் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.