உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இனி வெற்றி மேல்வெற்றி தான்!

இனி வெற்றி மேல்வெற்றி தான்!

பெருமாள் அல்லது ராமர் கோவில்களில் சுவாமியின் எதிரே ஆஞ்சநேயர் தனி சன்னிதியில் இருப்பார். சில தலங்களில் சுவாமி அருகில் நின்ற கோலத்தில் இருப்பார். மதுரை அருகிலுள்ள மன்னாடிமங்கலம் நரசிம்மர் கோவிலில் ஆஞ்சநேயர், தன்னைத்தானே வணங்கும் அபூர்வ காட்சியை தரிசிக்கலாம். இக்கோவிலின் முன் மண்டப சுவரில் ஆஞ்சநேயர் சிற்ப வடிவில் இருக்கிறார். இவருக்கு முன்புறத்தில் மற்றொரு ஆஞ்சநேயர் சிலை உள்ளது. இவர் சிற்ப வடிவில் இருப்பவரை இருகரம் கூப்பி வணங்கிக் கொண்டிருக்கிறார். நரசிம்மரையும் இரண்டு ஆஞ்சநேயர்களையும் வழிபட்டால் பயம் நீங்கும். செயல்களில் வெற்றி உண்டாகும் என்பது நம்பிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !