காட்டு மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா
ADDED :3667 days ago
அவிநாசி : ராயம்பாளையம், காட்டு மாரியம்மன் கோவிலில், பொங்கல் பூச்சாட்டு விழா நடைபெற்றது. இவ்விழா, 17ல் பொட்டுசாமி பொங்கல், காப்பு கட்டுதல், கம்பம் நடுதலுடன் துவங்கியது. தினமும் இரவு அபிஷேகம் மற்றும் சாட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. நேற்று அதிகாலை, அம்மன் அழைத்தல், மாவிளக்கு, பூவோடு எடுத்து ஊர்வலம், பொங்கல் வைத்தல் ஆகியனவும், மாரியம்மனுக்கு மகா அபிஷேக சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. ராயம்பாளையம், அபிராமி கார்டன் பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வழிபட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. மஞ்சள் நீர் விழா, அபிஷேகம், தீபாராதனையுடன், விழா இன்று நிறைவடைகிறது.